இப்பள்ளியின் முக்கிய அடிப்படைத் தேவைகளான தூய்மை, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. இவற்றைப் பராமரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்ற போதிலும் அவசியத்தின் அடிப்படையில் இந்த தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தூய்மைப் பராமரிப்பு
மாணவர்களிடையே தூய்மை, சுகாதாரம் மற்றும் உடல் நலன் பராமரித்தல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பபடுகிறது. தூய்மைப் பராமரிப்பிற்காக பள்ளியில் தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குப்பைகளை மாணவர்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்கிற சிந்தனை வளர்க்கப்பட்டு பள்ளியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் வலியுறத்தப்படுகிறது. தூய்மைப் பணியாளர் மூலமாக வளாகத் தூய்மைப் பணிகள் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்படுகின்றன.
குடிநீர் வசதி
அரசுப் பள்ளிகள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, மாணவர்களுக்கு போதுமான, தூய்மையான குடிநீர் தடையின்றி வழங்குவது ஆகும். நமது பள்ளியில் ONGC மூலம் கிடைக்கப்பெற்றுள்ள குடிநீர் சுத்தகரிப்பு அமைப்பின் வாயிலாக தினமும் 1000 லிட்டர் அளவிற்கு தூய்மையான குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆயினும் குடிநீரின் அளவு, தரம் மற்றும் அதற்கான குடிநீர் குழாய் அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவது பள்ளியின் அடுத்த இலக்காக உள்ளது.
கழிப்பிட வசதி
மாணவ, மாணவிகளின் மிகவும் அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதி நமது பள்ளியில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றது. கழிப்பிட வசதியை முறையாக மாணவர்கள் பயன்படுத்தும் விதம் பற்றி அவ்வப்போது அறிவுரைகள் வழங்கப்படுவதன் மூலமாக கழிவறைத் தூய்மை பராமரிக்கப்படுகின்றது. மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் நவீன வகையில் சிறுநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்துதல் அதற்கான தடையற்ற தண்ணீர் வசதியைத் தருதல் மாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகைளை நிறைவேற்றும் வகையில் கழிவறைகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றை நிறைவேற்றும் இலக்கை நோக்கி பள்ளி செயல்பட்டு வருகின்றது.